தனி ஒருவன்-2 படப்பிடிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் தனி ஒருவன் -2 படத்தில் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தனி ஒருவன்-2 படப்பிடிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்
Published on
Updated on
1 min read

கடந்த 2019-ல்  மலையாளத்தில் நடிகர் பிரிதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் மன்சு வாரியார் நடிப்பில் வெளியாகி  பெரிய ஹிட்டடித்த  பிளாக்பஸ்டர் படமான லூசிபர் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உ ள்ளதாகவும், மோகன்லால் கதாபாத்திரத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாகவும்,இப்பட த்தை மோகன் ராஜா இயக்குவதாகவும்   செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் லூசிபர் தெலுங்கு ரீமேக் பத்திலிருந்து இயக்குனர் மோகன் ராஜா வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. .ஆனால் மோகன் ராஜாவின் பிறந்தநாளில்அவரை சந்தித்து பிறந்தநால் தெரிவித்த அப்படத்தின் தயாரிப்பாளர்கள்,மோகன்ராஜா லூசிபர் தெலுங்கு ரீமேக் பத்திலிருந்து விலகவில்லை அவர் தான் இப்பத்தை இயக்குகிறார் என்பதை  உறுதிசெய்து அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் இடம்பெற்ற  மஞ்சு வாரியரின்  கதாபாத்திரத்தில் தெலுங்கில்  நயன்தாரா ஏற்று நடிப்பார் என்றும் அவரிடம் இது தொடர்பாக சுமூகமான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர். லூசிபரின் தெலுங்கு ரீமேக்கைத் தவிர, மேலும் ஒரு தெலுங்கு படத்தையும் இயக்க மோகன் ராஜா திட்டமிட்டுள்ளார்.இதற்கிடையில், மோகன் ராஜா தமிழில்  தனது சகோதரர் ஜெயம்  ரவி நடிப்பில் உருவாகும் தனி ஓருவன் 2 ம் பாகத்தை இப்படங்களின் படப்பிடிப்புகை முடித்த பின் உடனடியாக  தொடங்குவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதற்குள் ஜெயம் ரவி நடித்து வரும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்து விடும் என்கிறார்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com