சர்ச்சையான தீபிகாவின் காவி உடை...ஆதரவு தெரிவித்த பிரபல நடிகர்...!

சர்ச்சையான தீபிகாவின் காவி உடை...ஆதரவு தெரிவித்த பிரபல நடிகர்...!
Published on
Updated on
1 min read

பதான் படத்தின் பாடல் சர்ச்சையில் நடிகை தீபிகா படுகோனுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். 

பதான் திரைப்படம்:

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் “பதான்” திரைப்படத்தில் கதாநாயகனாக ஷாருக்கானும், அவருக்கு ஜோடியாக கதாநாயகி தீபிகா படுகோனும் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

சர்ச்சையை ஏற்படுத்திய பாடல்:

இதனிடையே இந்த படத்தின் முதல் பாடலாக “பேஷ்ரம் ரங்” என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடல் வெளியான ஒரே நாளில் 1.9 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை வென்றுள்ள இப்பாடலில், நடிகைதீபிகா படுகோன் உச்சகட்ட கவர்ச்சியில் நீச்சல் ஆடையில் நடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்ப்புகள்:

தீபிகா படுகோன் இந்த படத்திற்காக 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகவும், இது வழக்கத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாடலில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ள தீபிகா படுகோனுக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

மதஉணர்வுகளை புண்படுத்துவது போன்ற பாடல்:

அந்த வகையில், மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா, பதான் படத்தின் “பேஷ்ரம் ரங்” பாடலில் காவி நிற நீச்சல் உடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்த நடிகை தீபிகா படுகோனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், காவி நிறத்தில் கவர்ச்சியாக நடித்தது தங்கள் மதஉணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

நடிகைக்கு ஆதரவு தெரிவித்த நடிகை:

இந்நிலையில் காவி நிறத்தில் கவர்ச்சியாக நடித்தது தங்கள் மதஉணர்வுகளை புண்படுத்துவதாக கூறியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, பாடலில் கவர்ச்சி நடனத்திற்கு காவி பயன்படுத்தப்படுவது தவறு என்று சொல்பவர்கள், காவி உடையணிந்து வெறுக்கத்தக்க வகையில் பேசுவதும் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவதும் மட்டும் சரியா எனக்கேட்டு தீபிகா படுகோனுக்கு தனது ஆதரவை பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com