கணவரின் ஆசையை 'பிகினி' அணிந்து நிறைவேற்றிய நடிகை!

கணவரின் ஆசையை 'பிகினி' அணிந்து நிறைவேற்றினார் நடிகை ஸ்ரேயா
கணவரின் ஆசையை 'பிகினி' அணிந்து நிறைவேற்றிய நடிகை!
Published on
Updated on
1 min read

தமிழ் திரையுலகில்  ரஜினி, விக்ரம், விஜய்,தனுஷ்  என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த  நடிகை ஸ்ரேயா சரண், கடந்த சில வருடங்களுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த டென்னீஸ் வீரர் ஆண்ட்ரே கோஸிவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக வலம் வரும்  ஸ்ரேயா சரண் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஸ்ரேயா இரண்டு மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ஸ்ரேயாவின் கணவர் ’நாம் பீச்சுக்கு செல்லலாம், ஏதாவது 'கேஷுவலா' ஆடை அணிந்து வா’ என்று கூறியதாகவும் இதையடுத்து,‘கணவரின் ஆசையை நிறைவேற்ற பிகினி மாதிரியான உடையுடன் கடற்கரைக்கு  சென்றதாக  குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட பிகினி போல் இருந்த கண்ணாடி உடையுடன் ஸ்ரேயா ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். ஸ்ரேயாவின் புகைப்படம் வழக்கம் போல் அவரது ரசிகர்களால் வைரலாகி வருகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com