உனக்கு மானத்தை விட; ப்ராஜெக்ட் பெருசா.! சின்மயி குறித்த ஆடியோ வெளியிட்ட பிரபலம்

உனக்கு மானத்தை விட; ப்ராஜெக்ட் பெருசா.! சின்மயி குறித்த ஆடியோ வெளியிட்ட பிரபலம்
Published on
Updated on
1 min read

தென்னிந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி. ஒரு காலத்தில் சின்மயின் குரலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனால் சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தது, சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக சின்மயின் பெயர் பெரும் டேமேஜ் ஆனது. மேலும்  இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்த நிலையில், சின்மயி வைரமுத்துவின் மீது குற்றச்சாட்டை வைத்ததால், அவர் டப்பிங் யூனியன் உறுப்பினர் தகுதியை இழந்துள்ளார். 

இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் மீரா மிதுன், பப்ஜி மதன் ஆகியோரின் லட்சணத்தை பற்றி முதன்முதலாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஜான் மைக்கேல் என்பவர் தற்போது சின்மயி பற்றி பேசிய ஆடியோ ஒன்று லீக்காகி உள்ளது. 

இதில் ஜோ மைக்கேல் சின்மயியை, ‘சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக எல்லா வேலையும் பாக்குறது, அப்பவே ஒரு டைரக்டர் படுக்க கூப்பிடும் போதே, என்னை இப்படி கூப்பிடுகிறார் என்று பிரஸ் முன்னாடி போய் நின்றுருக்கணும்,  ஆனால் உனக்கு மானத்தை விட ப்ராஜெக்ட் பெருசா தெரிஞ்சிருக்கு’ என்று பேசியுள்ளார். இந்த ஆடியோவானது தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து ஜோ மைக்கேல் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த ஆடியோ கட் செய்யப்பட்டு சித்தரிக்கப்பட்டது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com