"விளைவுகள் மிக மோசமாக இருக்கும்" இணையத்தில் வைரலாகும் நடிகர் ராஜ்கிரணின் பதிவு !

"விளைவுகள் மிக மோசமாக இருக்கும்" இணையத்தில் வைரலாகும் நடிகர் ராஜ்கிரணின் பதிவு !
Published on
Updated on
1 min read

இஸ்லாமியர்களின் பொறுமையை தவறாக புரிந்து கொண்டால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என திரைப்பட நடிகர் ராஜ்கிரண் காட்டமாக தெரிவித்துள்ளார். 

இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும் அவர்கள் பொறுமையாக இருப்பதை தவறாக புரிந்து கொண்டால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என திரைப்பட நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ,
அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...

"இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்",
பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், 
பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்... இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்” என்று நடிகர் ராஜ்கிரண் காட்டமாக தெரிவித்துள்ளார். 

முன்னதாக, இஸ்லாம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com