நரமாமிசம் உண்ணும் பழங்குடியின மக்களைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்காக, நான்கு பேர் கொண்ட படக்குழுவினர் அமேசான் மழைக்காட்டிற்குப் பயணிக்கின்றனர். ஆனால் அவர்களில் அனைவரும் மர்மமான முறையில் காணாமல் போகின்றனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு, நியூயார்க் பல்கலைக்கழக மானுடவியலாளர் ஹரோல்ட் மன்ரோ அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்படுகிறார். அவர் உள்ளூர் யனோமாமி மற்றும் ஷமடாரி பழங்குடியினரைச் சந்திக்கிறார். ஒருவழியாக ஹரோல்ட் மன்ரோவிற்கு முந்தய குழுவின் காமரா சிக்கியது. அதில் அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய செய்தது. இதற்கு முன்பு சென்ற குழுவினர் ஆவணப்படத்தை இன்னும் சுவாரஸ்யமாக்க அந்த பழங்குடி மக்களை அச்சுறுத்தியும், அவர்களை சித்திரவதை செய்தும் வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பழங்குடி மக்கள் அவர்களை மிகக்கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனை பார்த்த ஹரோல்ட் மன்ரோ என்ன செய்கிறார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
Cannibal Holocaust திரைப்படம் 1980களில் ருக்கேரோ டியோடேட்டோவால் இத்திரைப்படம் இயக்கப்பட்டது. இத்திரைப்படம் உலகளவில் கடுமையான எதிர்ப்பினை சந்தித்தது. காரணம், இத்திரைப்படம் தத்ரூபமாக காட்டிய இரத்தம், வன்முறை, கொலை இவையே அதற்கு காரணம். மேலும், இத்திரைப்படத்தின் இயக்குநர் தனது நடிகர்களை வேறு படங்களில் எதுவும் நடிக்கவேண்டாம் என்றும், பொதுவெளியில் பெரிதாக இத்திரைப்படம் வெளியாகும் வரை தோன்றவேண்டாம் என்றும் அவர் கூறியிருந்தார். இதனால் Cannibal Holocaust திரைப்படம் வெளியான பின்பு, பல்வேறு தரப்புகளில் இருந்து. "அந்த நடிகர்களை இயக்குநர் கொன்றுவிட்டார்" என்ற வாதத்தை முன்வைத்தனர். இதனால் இயக்குநர் ருக்கேரோ டியோடேட்டோ காவல்துறையால் கைதும் செய்யப்பட்டார். இந்தப் படத்தில், மிகவும் சர்ச்சைக்குரிய வகையில், நிஜ வாழ்க்கையில் பல விலங்குகள் திரையில் கொல்லப்படுவது போன்று சித்தரிக்கப்பட்டதால், இப்படம் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது.
மேலும், திரைப்படத்தை இயக்குநர், நடிகர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்பதை நீதிபதி முன் நிரூபிக்க வேண்டியது இருந்தது. அதனால் திரைப்படத்தில் நடித்த மொத்த நடிகர்களும் ஆஜரானார்கள். மேலும், ஐக்கிய இராச்சியம் (UK) இத்திரைப்படத்தை தடை செய்தது. மேலும், 1984-ம் ஆண்டின் காணொளிப் பதிவுகள் சட்டத்திற்குப் பிறகு தடை செய்யப்பட்டது. இறுதியில், இதற்குச் சான்றிதழ் வழங்கப்பட்டு, ஐந்து நிமிடங்கள் நீக்கப்பட்டு 2001-ல் மீண்டும் வெளியிடப்பட்டது. பின்னர் 2011-ல், 15 வினாடிகள் நீளமுள்ள விலங்கு இறப்புக் காட்சியைத் தவிர மற்ற அனைத்து வெட்டுக்களும் சரிசெய்யப்பட்டு திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் தனது 83வது வயதில் இந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் இயக்குநர் காலமானார். மேலும், இத்திரைப்படம் இன்று வரை பேசுபொருளாகவே இருந்துவருகிறது. இத்திரைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் இருந்தாலும், திரைப்படத்தின் முடிவின் யார் கொடூரமானவர்கள்? என்ற வாதத்தை விட்டுச்செல்வதாக சினிமா பிரியர்கள் கூறுகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.