மெட்டி ஒலி தொடரில் நடித்து பிரபலமான நடிகை உடல்நலக்குறைவால் திடீர் மரணம்...

மெட்டி ஒலி தொடரில் நடித்து பிரபலமான நடிகை உமா மகேஸ்வரி உடல்நலகுறைவால் உயிரிழந்தார்.
மெட்டி ஒலி தொடரில் நடித்து பிரபலமான நடிகை உடல்நலக்குறைவால் திடீர் மரணம்...
Published on
Updated on
1 min read

சேரன் இயக்கிய வெற்றிக் கொடிகட்டு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் உமா மகேஸ்வரி.திருமுருகன் இயக்கிய 'மெட்டி ஒலி' சீரியலில் விஜி என்ற கேரக்டரில் நடித்தார். திருமுருகன் மனைவியாக இதில் நடித்த அவர் கேரக்டர் மிகவும் பிரபலமானது. இந்த கேரக்டர் மூலம் பிரபலமான அவர், தொடர்ந்து நடித்து வந்தார். ஒரு கதையின் கதை, மஞ்சள் மகிமை' உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தார். கால்நடை மருத்துவரான முருகன் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர், அதற்குப் பிறகு தொடர்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

 சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த உமா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இவரின் மரணம்சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com