விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமான 'ஜனநாயகம்' எச். வினோத் எழுதி இயக்கியுள்ளார், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ளார். பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், படக்குழுவினர் இன்னும் தேதியை உறுதி செய்யவில்லை. ஆனால், எதிர்பாராத விதமாக அப்படத்தின் ஐந்து நிமிடக் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளநிலையில், தற்போது முழு படமும் வெளியான நிலையில் 'ஜனநாயகன்' படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. இந்தக் கசிவின் மூலம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இந்தச் செயல் ரசிகர்கள் மற்றும் பயனர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 'ஜனநாயகம்' திரைப்படம் தணிக்கை குழுவின் தணிக்கை சான்றிதழ் குழுவால் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக நடிகரும், அரசியல் தலைவருமான விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் என கூறியிருந்த நிலையில் தணிக்கை குழு சில காட்சிகளை நீக்ககோரிய நிலையில், படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. அதன் பின்பு தணிக்கை குழுவில் இருந்த ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மீண்டும் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் இருந்தது. அதன் பின்பு சர்ச்சைக்குரிய காட்சிகளை மீண்டும் நீக்க கோரியுள்ளனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படத்தின் 5 நிமிட காட்சி தற்போது இணையத்தில் 'லீக்' ஆகியுள்ளது. அதனையடுத்து, இத்திரைப்படத்தை பாடல் வெளியானது. தற்போது முழு படமுமே இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. தற்போது, இந்த விவகாரத்தில் மொத்த திரைக்குழுவும் விஜய்க்கும், 'ஜனநாயகம்' திரைபடக்குழுவிற்கும் ஆதரவாக தங்கள் குரலை எழுப்பியுள்ளனர். அவர்களில் நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயனும், தனது X பக்கத்தில் இந்தச் செயலைக் கண்டித்ததோடு, இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். "ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் பேரார்வம், இரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்படுகிறது" என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டியதோடு, மக்கள் திருட்டுப் பிரதிகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார். "தயவுசெய்து திரையரங்குகளில் வெளியாகும் வரை காத்திருந்து, படம் திரையரங்குகளில் பார்க்கப்பட வேண்டும். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று எழுதிய அவர், "திறமையாளர்களை", அவர்களின் கடின உழைப்பை மற்றும் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இதனையடுத்து, திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முக்கியமாக, விஜய்க்கு ஆதரவாக நடிகை குஷ்பூ, விஜய் ஆண்டனி, விஷால், ஜெய், ஜீவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போன்றோர் 'ஜனநாயகனுக்கு' ஆதரவாக பலரும் களமிறங்கியுள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர்கள், கசிவின் மூலத்திற்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். மேலும், அதை பரப்பிய அனைவர் மீதும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கசிந்த எந்தவொரு உள்ளடக்கத்துடனும் ஈடுபடுவதையோ அல்லது பகிர்வதையோ தவிர்க்குமாறு அவர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். மீறினால் கடுமையான உரிமையியல் மற்றும் குற்றவியல் விளைவுகள் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்