“படம் முழுக்கவே Wow Factor தான்” - ‘கூலி’ எப்படி இருக்கு!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி உள்ள இப்படம் கோலிவுட்டில் ரூ.1000 கோடி ....
Rajinikanth
Rajinikanth
Published on
Updated on
1 min read

ரஜினி திரையுலகத்திற்கு வந்து இதோடு 50 ஆண்டுகள் ஆகின்றது. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975 -ஆம் ஆகஸ்ட் 15 வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் தான் ரஜினி அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த வரும் திரைத்துறையில் அவருக்கு பொன் விழா வருடம்.

இந்த நிலையில்தான் அவரது 171 -ஆவது திரைப்படமாக கூலி இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அமீர்கான், சத்யராஜ், உப்பேந்திரா, நாகர்ஜுனா, சௌபின் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி உள்ள  இப்படம் கோலிவுட்டில் ரூ.1000 கோடி வசூலிக்கும் முதல்படமாக இது அமையும் என கூறப்பட்டது.  இந்நிலையில் இப்படத்தின் முதல்காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில் தற்போது படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன. படத்தில் ரஜினியின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக அனைத்து தரப்பு ரசிகர்களும் சொல்கின்றனர். பெரும்பான்மையான ரசிகர்கள் படத்தின் second half -ல் வரும் பிளாஷ் பேக் அருமையாக இருப்பதாக சொல்லி இருக்கின்றனர். படதில் ஏதேனும் vow Factor இருக்கிறதா? என  கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு ரசிகர் ஒருவர் படம் முழுக்க Vow Factor தான் என சிலாகித்துக் கூறினார்.

ஆனால் சில எதிர்மறையான விமர்சனங்களும் வருகின்றன. படம் முதல் பாதி இழுபறியாக இருப்பதாகவும், லோகேஷ் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றும் சொல்கின்றனர். ஆனால் எது எப்படியோ ரஜினியின் ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்டம் தான்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com