RRR திரைப்படத்தின் முதல் பாடல் ஆகஸ்டு 1-ம் தேதி வெளியீடு

RRR திரைப்படத்தின் முதல் பாடல் ஆகஸ்டு 1-ம் தேதி  வெளியீடு
Published on
Updated on
1 min read

RRR திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தயாராகிவரும் RRR படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ் கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் பாடலை ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கீரவாணி இசையில் நட்பை மையப்படுத்தி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com