சாய் பல்லவியின் உருவத்தை கேலி செய்த நெட்டிசன்..! விவாத நிகழ்ச்சியில் சாய்க்கு ஆதரவாக பேசிய தமிழிசை செளந்தரராஜன்!!

சாய் பல்லவியின் உருவத்தை கேலி செய்த நெட்டிசன்..! விவாத நிகழ்ச்சியில்  சாய்க்கு ஆதரவாக பேசிய தமிழிசை செளந்தரராஜன்!!
Published on
Updated on
2 min read

தெலுங்கில் அடுத்தடுத்த படங்கள் மூலம் பட்டைய கிளப்பி கொண்டிருக்கும் நடிகை தான் சாய் பல்லவி. இவர் தன் நடிப்பின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் மட்டுமின்றி நடனத்தின் மீதும்  மிகுந்த ஆர்வம் கொண்டதால் அவ்வப்போது கிளாசிக்கல் டான்ஸிலும் பட்டையை கிளப்பும் அட்டகாசமான வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருவார். இதனால் இவரின் நடனத்திற்கே ஒட்டுமொத்த ரசிகர்களும் மயங்கி கிடக்கின்றனர்.

இவர் மற்ற நடிகைகளைப் போல் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தன்னுடைய அபாரமான நடிப்பின் மூலம் தென்னிந்திய துறையில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான ’சியாம் சிங்கா ராய்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில்  நெட்டிசன் ஒருவர் சாய் பல்லவியின் உருவத்தை கேலி செய்து சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாகவே இந்த சம்பவம் குறித்து சிலர் சாய் பல்லவிக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் எதிர்ப்பாகவும் இணையதளத்தில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த நிலையில், இது குறித்து தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் கூட நடத்தப்பட்டது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்ட புதுவை மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சாய் பல்லவிக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் பேசியபோது, ‘உருவத்தை வைத்து கேலி கிண்டல் செய்யும் அனுபவத்தை நானும் பெற்றுள்ளேன் என்றும், கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளேன் என்றும், ஆனால் என்னுடைய திறமையாலும், அதிக பணியாலும், உழைப்பாலும் அந்த காயங்களை ஆற்றினேன் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக பெண்கள் முன்னேறுவதை தடுக்க முடியாத சமூகம் அவர்களை காயப்படுத்தி அவர்களின் வேகத்தை தடுப்பதற்கான முயற்சி தான்  என்றும், சாய்பல்லவி மீதான விமர்சனமும் அப்படிப்பட்ட எதிர்மறையான தாக்குதல் தான் என்றும், ஆனால் அதையெல்லாம் மீறி அவர் கண்டிப்பாக அனைவரும் எதிர்பார்ப்பதை விட முன்னேறுவார் என்றும் சாய் பல்லவிக்கு ஆதரவாக ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் பேசியுள்ளார். இந்த கருத்து இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com