சார்பட்டா படத்தை பார்க்காமலேயே போராட்டம் நடத்தகோரி மனு அளிக்க வந்த எம்ஜிஆர் மக்கள் கட்சியினர்...
எம்ஜிஆர் மக்கள் கட்சியின் நிறுவனர் விஸ்வநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த திரைப்படமான சார்பட்டா பரம்பரை படத்தில் எம்ஜிஆரை பற்றி தவறாக விமர்சிக்கப்பட்ட உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனைக் கண்டித்து இயக்குனர் பா ரஞ்சித் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளார்.
உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளார். எம்ஜிஆர் குறித்த வரலாறு தெரியாமல் இயக்குனர் பா ரஞ்சித் தவறாக விமர்சித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
படத்தில் எம்ஜிஆர் குறித்த தவறான காட்சிகளை நீக்க முறை போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார் . இந்நிலையில் அந்தப் படம் பார்த்துள்ளீர்களா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இதுவரை பார்த்தது இல்லை எனவும், ஆனால் யூட்யூப் சேனலில், சார்பட்டா படத்தில் எம்ஜிஆரை பற்றி தவறாக விமர்சிக்கப்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்ததை வைத்து,பா.ரஞ்சித்தை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.