ராம் சரண் மனைவி போட்ட ஒரே ஒரு புகைப்படம் !ட்ரோல் செய்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

ராம் சரண் மனைவி போட்ட ஒரே ஒரு புகைப்படம் !ட்ரோல் செய்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
Published on
Updated on
1 min read

பொதுவாக சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்கள் பேசும் ஒரு சின்ன விஷயம் கூட இணையத்தில் மிகப் பெரிய அளவில் வைரலாக பேசப்படும். அப்படி தான் தற்போது ஒரு நடிகரின் மனைவி போட்ட டுவிட்டால் கடும் சவாலை அவர் சந்தித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனும், பிரபல நடிகருமாக வலம் வருபவர் தான் ராம் சரண். இவர் மனைவி உபஸ்னா அவருடைய சோஷியல் மீடியா பக்கத்தில் போட்ட ஒரு டுவிட்டால் கடும் ட்ரோலை சந்தித்து வருகிறார். 

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவில் அனைவருக்கும் வாழ்த்து சொல்லும் விதமாக உபஸ்னா ட்விட்டரில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம்  கன்னியாகுமரி சுசீந்திரம் கோவில் கோபுரத்தில்  பலரும் அமர்ந்திருப்பது போல போட்டோஷாப் செய்யப்பட்டு இருந்தது.

உபஸ்னா அந்தப்புகைப்படத்துடன், சேர்த்து தடைகள் இல்லாமல் செயலில் ஈடுபாடு மற்றும் உள்ளடக்கம் மூலம் ஒரு முற்போக்கான, சகிப்புத்தன்மை கொண்ட தேசத்தை உருவாக்குவதில் ஈடுபடுவோம் என்றும், அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படத்தில் என்னையும், ராம் சரணையும் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்றும் சேலஞ்ச் விடுத்துள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் ராம் சரண் மற்றும் உபஸ்னா அந்த போட்டோவில் எங்கு இருக்கிறார்கள் என லென்ஸ் வைத்து தேட ஆரம்பித்தாலும், ஒருசிலர் அந்த போட்டோவில் பலரும் காலில் ஷூ / செருப்பு உடன் இருப்பது பற்றி குறிப்பிட்டு உபஸ்னாவை மோசமாக திட்டி வருகின்றனர். ஒரே ஒரு போட்டோ போட்டதற்கு ராம் சரண் மனைவியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.    

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com