நடிகர்கள் சிம்பு, தனுஷ் -க்கு ரெட் கார்ட் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்..!

நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்டு விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  
சென்னை அண்ணா சாலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவடையாத மைக்கேல் ராயப்பன், பிரச்சனையை மேற்கோள்காட்டி சிம்புக்கு ரெட் கார்ட்  விதிக்க முடிவு செய்யப்பட்டது.  
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
`நடிகர் தனுஷ் தேனாண்டாள் பிலிப்ம்ஸ் முரளி தயாரிக்கும் படத்திற்கு வராமல் நஷ்டம் ஏற்படுத்தியதாக தனுஷுக்கு ரெட் கார்டு விதிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களுக்கு ரெட் கார்டு அளிக்கப்பட்ட சம்பவம், கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com