ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்ட சன்பிக்சர்ஸ்..வெளியானது பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி!

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள  ‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்ட சன்பிக்சர்ஸ்..வெளியானது பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி!
Published on
Updated on
2 min read

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் தான் ‘பீஸ்ட்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இதனையடுத்து இந்த ஆண்டின் பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக ‘பீஸ்ட்’ திரைப்படம் விளங்குவதால் உலக அளவில் வசூலில் மிகப்பெரிய சாதனையை எட்டும் என்று தகவல் கூறப்படுகிறது. மேலும்  ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் முதல் சிங்கிளான அரபிக் குத்து பாடலும், 2வது சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா...’ என்ற பாடலும் வெளியாகி அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் விஜய் பாடியுள்ள ‘ஜாலியோ ஜிம்கானா...’பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தையே கலக்கி வருகிறது என்றே சொல்லலாம். என்னதான் விஜய் ரசிகர்களுக்கு படத்தின் பாடல்களை வெளியிட்டாலும் அவர்கள் எதிர்பார்ப்பது என்பது படத்தின் ரிலீஸ் தேதியை தான்.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பார்த்ததும்  விஜய் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com