கோலாகலமாக தொடங்கியது “தளபதி 66” படப்பிடிப்பு..! பூரிப்பின் உச்சியில் ராஷ்மிகா..!

தளபதி 66 படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பும் இன்று தொடங்கியது....
கோலாகலமாக தொடங்கியது “தளபதி 66” படப்பிடிப்பு..! பூரிப்பின் உச்சியில் ராஷ்மிகா..!
Published on
Updated on
2 min read

தளபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகின்ற 13 ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 66’ படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, வம்சி, தமன், சரத்குமார் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் ’தளபதி 66’ படத்தின் பூஜை மட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பும் இன்று ஆரம்பமாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளியான புகைப்படங்களின் ஒரு சில காட்சிகளில் இருந்தே இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது என்றே சொல்லலாம்.  

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் தளபதி 66 பட பூஜையில் கலந்துக்கொண்ட ராஷ்மிகா மந்தனா மிகுந்த குஷியில் துள்ளிக்குதித்து கொண்டிருந்தார். அதற்கு காரணம் செலிபிரட்டி க்ரெஷ் விஜய் என்பதால் அவருடன் நடிக்க வேண்டும் என்ற கனவு தளபதி 66 படம் மூலம் நிறைவேற இருப்பதால் ராஷ்மிகா பூரிப்பில் மிதக்கிறார் என்று கூறுகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com