விரைவில் உருவாக உள்ளது 'தி வாக்சின் வார்' ..... 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் ' இயக்குனரின் அடுத்த படைப்பு...!

விரைவில் உருவாக உள்ளது 'தி வாக்சின் வார்' ..... 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் ' இயக்குனரின் அடுத்த படைப்பு...!
Published on: 
Updated on: 
1 min read

தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படக்குழுவினர் 'தி வாக்சின் வார்' என்ற பெயரில் புதிய படத்தை உருவாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் பாலிவுட்டில் வெளியான ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த நிலையில் சில சர்ச்சையையும் உண்டாக்கியது. இந்த படத்தை இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி இருந்தார். இந்த திரைப்படம், 90 களின் காலகட்டத்தில் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியியை கதை களமாக கொண்டது. படத்தைப் பார்த்துவிட்டு பிரதமர் மோடி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். 

இந்நிலையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி அந்த குழுவுடன் அடுத்ததாக 'தி வாக்சின் வார்' என்ற  படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் அடுத்தாண்டு சுதந்திர தினத்தன்று தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உட்பட 11 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com