பொழுதுபோக்கு
திரைப்படமாகிறது வாச்சாத்தி சம்பவம்..!
தமிழ்நாட்டை உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தை திரைப்படமாக நடிகை ரோகிணி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1992ம் ஆண்டு தருமபுரியின் வாச்சாத்தியில், பழங்குடிப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வனத்துறை அதிகாரிகளுக்கு, 31 ஆண்டுகளுக்குப்பின் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில், CPM கட்சியும் மலைவாழ் மக்கள் சங்கமும் தொடர்ந்து போராடிய இவ்வழக்கின் பாதையை, எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யாவின் திரைக்கதை - வசனத்தில், ஜெய்பீம் புகழ் லிஜோமோல் நடிப்பில் திரைப்படமாக ரோகிணி இயக்குகிறார்.