வெளியானது திருச்சிற்றம்பலம் ட்ரெயிலர்:

வெளியானது திருச்சிற்றம்பலம் ட்ரெயிலர்:
Published on
Updated on
2 min read

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை தனுஷ் வைத்துக் கொடுத்த மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் திருச்சிற்றம்பலம். டாமியன் சாசெல் எழுதிய இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக, மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

அனிருத் இசையில் தற்போது படத்தின் பாடல் ஒன்று, “மேகம் கருக்காதா” என்ற பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், வருகிற ஆக்ஸ்டு 18ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படம், மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனுஷின் பிறந்தநாளை ஒட்டி, படத்தின் புதிய அப்டேட்டாக இசை வெளியீடு குறித்த தகவல் வெளியிடப்பட்டது.

பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா நடித்துள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. நகைச்சுவை நிரைந்த இந்த ட்ரெயிலர் மூலம், இது ஒரு கலாட்டா காமெடி படமாகத் தெரிகிறது. உணவு டெலிவரி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் பெயர் படத்தின் தலைப்பான திருச்சிற்றம்பலம். தனக்கும் தனது தாத்தாவான பாரதிராஜாவிற்கும் ஒரே பெயர் என்பதால், பல வகையான கேளிகளையும் கிண்டல்களையும் சந்தித்து வரும் திருச்சிற்றம்பலத்தை அனைவரும் பழம் என்று அழைக்கின்றனர்.

தந்தை ஒரு காவலராக இருக்க, பிரகாஷ் ராஜ், ஒரு கராரான தந்தை போல நடித்திருக்கிறார். சிறு வயது தோழியாக நித்யா மேனன் மற்றும், காதலர்களாக ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ளனர். இருவரைக் காதலிக்கும் பழம்- தனுஷ்ற்கு, உதவி செய்கிறார் நித்யா. கலகலப்பாக இருக்கும் காட்சிகளுக்கு இடையிடையே வரும் சில சண்டைக் காட்சிகள், தனுஷின் சிறப்பு படமான ‘வி.ஐ.பி’ படத்தின் சாயல்களைக் கொண்டுள்ளதாக ரசிகர்கள் கருத்தளித்து வர, படத்திற்கான எதிர்பார்ப்பு, மக்களிடையே பெரிதாக அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அடுக்கடுக்கான படங்களைக் கொடுத்து வரும் தனுஷ், சமீபத்தில், தி க்ரே மென் என்ற ஆங்கில படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, உலகளவில் ரசிகர்களை ஈர்த்தார். மேலும், அந்த படத்தை உருவாக்கிய. ருசோ சகோதரர்களின் கவனத்தை ஈர்த்த தனுஷை வைத்து ஒரு தனி கதையை உருவாக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியிட்டனர்.

தற்போது வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தைத் தொடர்ந்து, பல படங்கள் வெளியாகக் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com