
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வருகிற மே 1 -ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இணையமைத்துள்ளார்.
இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெய்ன்மென்ட் சேர்ந்து தயாரித்துள்ளது. இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு குடிபெயரும் ஒரு குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
“டார்க் காமெடி” எனும் வகைமையை கையில் எடுத்திருக்கும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.. இதில் பேசிய அறிமுக இயக்குனர் அபினிஷன் தன் பல ஆண்டு தோழிக்கு மேடையிலேயே புரபோஸ் செய்தார்,இந்த காட்சி இணையத்தில் வெளியாகி அனைவர் கருத்தையும் கவர்ந்துள்ளது.
அதற்கு முன்னதாக அவர் பேசியபோது “உண்மையிலே ரொம்ப எமோஷனல் -ஆஹ் இருக்கு. “எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த புரடியுசர்ஸ் -க்கு ரொம்ப நன்றி. என வயசையோ அனுபவத்தையோ வச்சி மட்டும் பாத்துருந்தாங்கன்னா எனக்கு இந்த வாய்ப்பு வந்துருக்காது. எனக்கு இந்த வாய்ப்ப கொடுத்த மகேஷ் அண்ணா, யுவராஜ் அண்ணா ரொம்ப நன்றி” என ஆரம்பித்து எல்லாருக்கும் நன்றி சொல்லி முடித்தார். அதன் பின்தான் இந்த கியூட்டனா சம்பவம் நடந்தது.
“கடைசியா ஒருத்தங்களுக்கு நன்றி சொல்லணும், அகிலா இளங்கோவன். ஆறாவது படிக்கும்போதிலிருந்தே எனக்கு உன்ன தெரியும். எனக்கு என்ன சொல்லணும்னு தெரில.. கேக்கணும்னுதா தோணுது வர அக்டோபர் மாசம் 31-ஆம் தேதி என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா? “லவ் யூ சோ மச்” நா இன்னைக்கு ஒரு பெட்டர் பர்சன் ஆஹ் இருக்கிறதுக்கு அம்மாவுக்கு எவ்ளோ பங்கு இருக்கோ அவ்ளோ பங்கு அகிலாவுக்கும் இருக்கு” என அவர் பேசும்போதே அவர் காதலி அகிலாவிற்கு ஆந்த கண்ணீர் வந்துவிட்டது.
இந்த அழகான மொமெண்ட் தான் அனைவர் மனதையும் கவர்ந்துள்ளது. அனைத்து தடைகளையும், தோல்விகளையும் கடந்து உடனிருக்கும் காதல்.. வாழ்வில் வெற்றி பெறுவதை காணும் அழகான தருணத்தில் இணையராய் சேர்ந்து வாழ அழைக்கும் அழைப்பு ஆனந்த கண்ணீரிலே முடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்