8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துக்கு ஜோடியாக திரிஷா!

8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துக்கு ஜோடியாக திரிஷா!

8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோடி திரைப்படத்தில் துணைநடிகையாக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய இவர் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்றது. சோழ மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாக கொணடு எடுக்கபட்ட இத்திரைப்படத்தில் திரிஷா குந்தவை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இந்நிலையில் 'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் விக்னேஷ் சிவன், அந்தப் படத்திலிருந்து விலக்கப்பட்டார்.

இதையடுத்து, அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com