"விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும்" விஷால் அறிவிப்பு!!

"விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும்" விஷால் அறிவிப்பு!!

40 கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற்று நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 ஆவது பொதுக் குழு அச்சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன், நடிகர்கள் உதயா, செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில்  நடிகர்  மாரிமுத்துவின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நலிவடைந்த கலைஞர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக, நடிகர்  சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷால், அடுத்த ஓராண்டுக்குள் கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும் என நம்புவதாகவும் விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். நடிகர் சங்க கட்டிடம் கட்டுமானப் பணிகளுக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக கூறினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com