
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. மற்றவர்களை கேலி கிண்டல் செய்யாமல் தன்னைத்தானே டேமேஜ் செய்து கொண்டு சிரிக்க வைப்பவர். லாங்குவேஜ், எக்ஸ்பிரஷன்ஸ் என எப்படியெல்லாம் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியுமோ அப்படியெல்லாம் மக்களை சிரிக்க வைத்து வந்தார். இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தயாரித்த 24 ஆம் புலிகேசி படத்தில் நடிப்பதாக கூறி விட்டு பின்னர் நடிக்க மறுத்ததார் வடிவேலு. இதனால் இயக்குநர் ஷங்கர் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி வடிவேலு தொடர்ந்து நடிக்க ரெட் கார்டு பெற்றார்.
இதைத்தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் வடிவேலு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த வடிவேலுவின் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் வடிவேலுவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டது.
இதனால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் வடிவேலு. அந்த வகையில் நடிகர் வடிவேலு பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரம் இந்தப் படத்தில் வடிவேலு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இயக்குநர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை இயக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அந்தப் படத்திற்கு இன்னும் வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளதால் முதலில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ் என தகவல் வெளியாகியுள்ளன.