வலிமைங்கிறது அடுத்தவன காப்பாத்த தான்; அழிக்க இல்லை... வலிமை டிரைலர் புதிய சாதனை 

வலிமைங்கிறது அடுத்தவன காப்பாத்த தான்; அழிக்க இல்லை... வலிமை டிரைலர் புதிய சாதனை 
Published on
Updated on
1 min read

கோலிவுட்டில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகினர்கள் என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது.

அஜித் ரசிகர்கள் அதை ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு படத்தின் டிரைலரை வெளியாகி திரையில் அஜித் தரிசனம் கிடைக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.

நேற்று மாலை டிரைலர் வெளியான நிலையில் நான்கு மணி நேரத்திலேயே சுமார் 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் அவர்களது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 உயிரை எடுக்குற உரிமை நமக்கில்லை. வலிமைங்கிறது அடுத்தவன காப்பாத்த தான் அவன அழிக்க இல்லை என்பதுபோன்ற மாஸ் டயலாக்குகளால் படத்தின் டிரைலர் தாறுமாறாக டிரண்டாகி வருகிறது.

தற்போது வரை 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் வலிமை படத்தின் டிரைலர் பெற்றுள்ளது. இன்னும் ஏராளமானோர் பார்த்து கொண்டிருப்பதால் இந்த டிரைலர் பார்வையாளர் எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com