நயன்தாராவுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாமா? அதானே... வனிதா!!

நயன்தாராவுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாமா? அதானே... வனிதா!!
Published on: 
Updated on: 
1 min read

நடிகை வனிதா விஜயகுமார் 4வது திருமணம் செய்கிறார் என்ற செய்தி இணையத்தில் கடந்த வாரம்  வைரலானது.

நடிகை வனிதா விஜயகுமார் பல படங்கள் நடித்திருந்தாலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மீண்டும் பிரபலம் ஆனார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டார்.

தற்போது பட வாய்ப்புகளும் அதிகமாக வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  அவர் பிக்கப் டிராப் படத்திற்காக பவர் ஸ்டாருடன் திருமண கோலத்தில் எடுக்கப்பட்ட போட்டோ இணையத்தில் வைரலானது.

இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் வனிதாவிற்கு திருமணம் என்ற வதந்தி உருவாக காரணம்... சரி இது ஒரு பக்கம் இருக்க, புதிய சர்ச்சை கிளம்புனிச்சி...

என்னனா.., நயன்தாரா கூட தான்  ராஜா ராணி திரைப்படத்திற்காக ஆர்யாவுடன் திருமணம் என புரொமோஷன் செய்தார்.

அப்போது  அவரை யாருக்காவது கேட்க தைரியம் இருந்ததா, அவருக்கு ஒரு நியாயம், இவருக்கு ஒரு நியாயமா என ஒரு சிலர் கேட்க, அதை பிடித்துக்கொண்ட வனிதா...அதானே என்று கலாய்த்துள்ளார். இந்த கலாய்யை கண்ட நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com