“ Soul of Varisu " வாரிசு படத்தின் 3- வது சிங்கிள் வெளியானது...!

“ Soul of Varisu " வாரிசு படத்தின் 3- வது சிங்கிள் வெளியானது...!
Published on
Updated on
1 min read

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியானது.

நீயே நீயே நானே நீயே, அம்மா அம்மா, நூறு சாமிகள் இருந்தாலும் என பல பாடல்கள் தாயை பற்றிய சினிமாவில் வந்துகொண்டுள்ளது. அப்படி வரக்கூடிய பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்ககூடியவை. அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் 3- வது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கும் திரைப்படம் வாரிசு. விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், குஷ்பு, சரத்குமார், ராதிகா, பிரபு என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தில் ராஜூ தயாரித்துள்ளார். வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது. 

தமன் இசையில் முன்னதாக ரஞ்சிதமே பாடலும் தீ தளபதி பாடலும் வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று மூன்றாவது படலான “ சோல் ஆஃப் வாரிசு” என்ற பாடல் வெளியாகியுள்ளது. சின்ன குயில் சித்ரா குரலில் அற்புதமான ஒரு அம்மா பாடல் வெளியாகியுள்ளது. விவேக் வரிகளில் ‘ஆராரிராரோ கேட்குதம்மா’ எனத்தொடங்கும் இந்த பாடல் வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே எட்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. 

மேலும் வருகிற 24 ஆம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கின்றனர். பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கின்றனர்.

-- சுஜிதா ஜோதி   

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com