வா தலைவா... தலைவா... வந்தார் ஆட்டநாயகன் “வாரிசு”... 9 நிமிடங்களில் 1 மில்லியன்!

பல எதிர்பார்ப்புகளுக்கு பிறகு விஜயின் வாரிசு பட ட்ரெயிலர் வெளியானது. வெறும் 9 நிமிடங்களிலேயே 1 மில்லியன் பார்வையாளர்கள் எட்டி, சாதனை படைத்துள்ளது.
வா தலைவா... தலைவா... வந்தார் ஆட்டநாயகன் “வாரிசு”... 9 நிமிடங்களில் 1 மில்லியன்!

பல வருடங்களுக்குப் பிறகு விஜய் - அஜித் நேருக்கு நேர் மொதிக்கொள்ளும் பொங்கலாக இந்தாண்டு பொங்கல் இருக்க, துணிவு படத்துடன் வாரிசு படம் படு பயங்கரமாக எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் திணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று வாரிசு படத்தின் ட்ரெயிலர் வெளியாகி முதல் பந்திலேயே சிக்சர் மட்டுமின்றி சென்சூரியே அடித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

தில் ராஜுவின் “ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ்” தயாரிப்பில், தோழா படம் புகழ் வம்சி பைடிபள்ளி இயக்கிய படம் தான் “வாரிசு” தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக தயாராகி வரும் இந்த படத்திற்கு பல வகையான எதிர்ப்புகளும், பிரச்சனைகளும் வந்தது குறிப்பிடத்தக்கது. அதும், தெலுங்கில் இந்த படத்தை, தங்களது பொங்கல் தினத்தன்று வெளியிட கூடாது என தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பெரும் எதிர்ப்பை வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு, “வாரிசுடு” சந்தித்தது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் வாரிசு படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி, பல சாதனைகளை படைத்து வருகிறது. வெளியான 9 நிமிடங்களிலேயே 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

பல பயங்கர்மான வசனங்களைக் கொண்டுள்ள இந்த ட்ரெயிலரில், அதிக கவனம் பெற்றது, “It's time to give it back மாமே...”, “பவர் சீட்டுல இருக்காது சார், அதுல வந்து ஒருத்தன் உட்கார்ரான்ல அவன்ட தான் இருக்கும்” என்று வரும் வசனங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் விசில் பறக்கும் அளவிற்கு தூள் கிளப்பியது என்று சொல்லலாம்.

அது மட்டுமின்றி, வெளியான 38 நிமிடங்களிலேயே, 3.3 மில்லியன் பார்வையாளர்களும், 2 மணி நேரத்திலேயே 5.5 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது குறிப்புடத்தக்கது. விஜய் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் இந்த படத்தில், சரத் குமார், குஷ்பு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, நந்தினி ராய், சங்கீதா கிரிஷ், விடிவி கணேஷ், உட்பட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படமானது வருகிற பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில், அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் “துணிவு” படத்துடன் இணைந்து வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com