வீரன் படத்திற்கு இலவச டிக்கெட்: நம்பி வந்த குழந்தைகள் ஏமாற்றம்!

வீரன் படத்திற்கு இலவச டிக்கெட்: நம்பி வந்த குழந்தைகள் ஏமாற்றம்!
Published on
Updated on
1 min read

ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படத்திற்கு குழந்தைகளுக்கு இலவச டிக்கெட் என அறிவிக்கப்பட்டிருந்ததை நம்பி படம் பார்க்க வந்த குழந்தைகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் உருவாகியுள்ளது வீரன் திரைப்படம். இத்திரைப்படம் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் தமிழ்நாடெங்கும் திரைக்கு வந்தது. இந்த படம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள சினிப்ரியா  திரையரங்கில் சத்தியஜோதி தயாரிப்பு நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கு இலவசமாக வீரன் திரைப்படத்தின் காலை 10:30 காட்சி டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதனால் 300க்கும் அதிகமான குழந்தைகள் தங்களது பெற்றோருடன் குவிந்தனர். ஆனால் முறையான அறிவிப்பு இல்லாததால் அதிக அளவில் குவிந்த குழந்தைகளுக்கு திரைப்படத்திற்கான டிக்கெட் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் திரைப்படத்தை காண முடியாமல் குழந்தைகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனையொட்டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் முறையான அறிவிப்பு வழங்கப்படாததால் இவ்வளவு பேர் இங்கு குவிந்ததாக குற்றம் சாட்டினர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com