
விமல், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள துடிக்கும் கரங்கள் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னை வளசரவாக்கத்தில் உள்ள திரைப்பட இயக்குனர் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் பேரரசு,லிங்குசாமி,எழில் மற்றும் நடிகர் ரமேஷ்கண்ணா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
வேலுதாஸ் இயக்கத்தில், கே. அண்ணாதுறை தயாரிப்பில் உருவாகியுள்ள துடிக்கும் கரங்கள் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர், போலீசாரால் முடிக்க முடியாடஹ் வழக்கு ஒன்றை எப்படி முடித்து வைக்கிறார் என்று தான் இந்த கதை நகர்கிறது.
இந்த டீசர் வெளியான சிறிது நேரத்திலேயே பல பார்வையாளர்களை சுண்டி இழுத்தது. அதிலும், பல நாட்கள் கழித்து வெலியாகும் விமல்ன் படத்திற்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் ரசிகர்கள், மிகவும் உற்சாகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிலும் ஒருவரது கமெண்ட் என்னவென்றால், “கமலுடன் மோது..... விமலுடன் மோதாதே...!” என்பது தான். விமலின் மிகவும் tஹீவிரமான ரசிகர்களின் வரவேற்பு இந்த படத்திற்கு உள்ளது என்பது இந்த டீசரின் லைக்குகளிலும், கமெண்டுகளிலும் நன்றாகப் புலப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ’ஜெயிலர்’ படத்தில் இணைந்துள்ள நடிகர் சிவராஜ் குமார்...