
வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான மாநாடு படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது அதிகமாகி விட்டது என்றுதான் கூற வேண்டும் அந்த அளவுக்கு பெரிய முயற்சி எடுக்க உள்ளார்.
முதல் முறையாக வெங்கட் பிரபு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்துக்கான கதை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறதாம்.
மேலும் இந்த படத்தில் ஹீரோவாக தமிழ் நடிகர்களை தேர்வு செய்யாமல் கன்னட நடிகரான கிச்சா சுதீப் என்பவரை தேர்ந்தெடுத்துள்ளாராம் வெங்கட் பிரபு.
கடைசியாக வெங்கட்பிரபு இயக்கிய படங்கள் பெரிய அளவில் செல்லவில்லை என்பதும், அவரது இயக்கத்தில் உருவான பார்ட்டி படம் தற்போது வரை வெளியாக முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.