ரெண்டு காதலிகளுடன் செம ஆட்டம் போட்ட விஜய்சேதுபதி..! வெளியானது ’டுடுடு’ பாடலின் கிளிம்ஸ் வீடியோ!!

ரெண்டு காதலிகளுடன் செம ஆட்டம் போட்ட விஜய்சேதுபதி..! வெளியானது  ’டுடுடு’  பாடலின் கிளிம்ஸ் வீடியோ!!
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக விளங்கும் விஜய்சேதுபதி, நயந்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசரே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். 

இந்த படம் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'KRK'படத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ”டுடுடு” என்ற பாடலின் கிளிம்ஸ் வீடியோ நேற்று வெளியாகியுள்ளது.

செம கலர்ஃபுல்லாக இருக்கும் இந்த வீடியோவில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி செம ஆட்டம் ஆடும் காட்சிகள் அடங்கியுள்ளன. இந்த கிளிம்ஸ் வீடியோவே படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படத்தின் டீசர் மற்றும் கிளிம்ஸ் வீடியோவை பார்த்தாலே இந்த படம் விக்னேஷ் சிவனின் பாணியில் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடியில் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com