விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளா....?

விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளா....?

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

கடந்த ஜூன் 9 ம் தேதி, காதல் ஜோடிகளான விக்னேஷ் சிவன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு  ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதில்,  அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்காக வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.

மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், இன்று இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதால்  ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலர் இந்த குழந்தைகள் தத்தெடுக்கப் பட்டவையா அல்லது “வாடகை தாய்” மூலமாக குழந்தைகள் பெற்றுக் கொண்டனரா எனவும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com