
2026 -ஆவது சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இந்த தேர்தல் களத்தில் புது வரவு என்றால் அது ‘தமிழக வெற்றி கழகம்’ தான். விஜய் -ன் அரசியல் பிரவேசம், ஆதவ் அர்ஜுனா பிரஷாந்த் கிஷோர் ஆகியோரின் பங்களிப்பு என நல்ல ஒரு பப்ளிசிட்டியோடே வந்தது.
விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.
அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்தி தன் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார்.
இந்நிலையில் விஜய் -யால் பல தயாரிப்பளர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளதாக கூறி தமிழா தமிழா பாண்டியா பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார், இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “விஜய் -யால் பல தயாரிப்பாளர்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். இவர் எழுதாத பேனா, பழைய புத்தகத்தை அளித்தால் அது பெரிய சாதனையா?? இத்தனை ஆண்டுகளில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கியிருப்பாரா? இவரை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் இறுதியில் இறந்துதான் போனார்கள்… பைரவா என்ற ஒரு படம் வந்ததா? அந்த படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி, செத்தே போய்விட்டார்.
வேலாயுதம் படம் எடுத்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ‘நண்பன்’ படம் எடுத்த ரவி பிரசாத் கோதாவரி ஆற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டார்… நான் சொல்லுவதில் தவறு இருந்தால், என் மீது வழக்கு போட்டுக்கொள்ளுங்கள்.
இதையெல்லாம் விட 25 ஆண்டுகாலம் விஜய் உடன் இருந்த அவரின் மேனேஜர், வலது கரம் பி.டி செல்வ குமாருக்கு என்ன நடந்தது என்பதை பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவர் எந்த அளவுக்கு விஜய்க்காக உழைத்தார் என்றால், விஜய் படம் வெளியாகிறது என்றால், ஒரு திரையரங்குக்கு சென்று மொத்த டிக்கெட்டையும் வாங்கி… விஜய் படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடுகிறது என்ற பிம்பத்தை உருவாக்கி விடுவார். அப்படி அவர் படங்களுக்கு புரமோஷன் செய்தற்.
அவருக்கு ‘புலி’ படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுக்கிறார் விஜய். ஆனால் அந்த படம் ஓடவில்லை, படுதோல்வி அதிலுருந்து அவர் காணாமல் போய்விட்டார். 25 ஆண்டுகாலம் தனக்காக உழைத்த பி.டி.செல்வகுமாரை பார்க்க விஜய் இன்றுவரை மறுக்கிறார். கடலூர் சந்திரசேகர் என்ற ஒரு ஏமாற்றுக்கார ஜோசியர் இருக்கிறார், அவர் பேச்சை கேட்டுக்கொண்டு தன் படங்களால் தோல்வி அடைந்த தயாரிப்பளர்களை பார்ப்பதே இல்லை. ஏனென்றால் அவர்களை பிடித்த ‘சனி’ இவரையும் பிடித்துவிடுமாம். இதெல்லாம் எவ்வளவு பெரிய மூட நம்பிக்கை.
பெற்றோரோடும் இல்லை, மனைவி மகன், மகள் என யாருடனும் சுமூகமான உறவில் இல்லை. அந்த பனையூர் பண்ணை வீட்டில் தனியாக தான் இருக்கிறார் விஜய். இப்படி எல்லாம் இருக்கக்கூடிய நபர் தான் தமிழக முதல்வர் என்றால், நாம் கடலில் குதித்து இறந்துவிடலாம். ஒருவர் பொது வாழ்க்கைக்கு வரும்போது திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். இரவெல்லாம் மதுவிலும், விலை மாதுவிடமும் இருந்தால், எப்படி நீங்கள் அரசியல் செய்ய முடியும்? பொது ஒழுக்கமே இல்லாதவன் தான் சினிமாகாரன். விஜய் -க்கும் இது பொருந்தும்.” என பேசியிருந்தார்.
சர்ச்சைகளை கிளப்பிய இந்த வீடியோவை பி.டி செல்வ குமாரே தனது வாட்ஸ் அப் - ல் பகிர்ந்துள்ளது ‘எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை’ போல உள்ளது. பாண்டியனின் இந்த காட்டமான விமர்சனங்களை வரவேற்பதை போலவே உள்ளது பி.டி செல்வ குமாரின் செயல்பாடுகள். 25 ஆண்டுகாலம் ஒருவரோடு பயணிப்பது என்பது நிச்சயம் மிகப்பெரும் விஷயம். உண்மையில் விஜய் பி.டி செல்வ குமாரை ஒதுக்கிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது. மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விஜய் தரப்பு என்ன சொல்லப்போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.