சனிக்கிழமை கூடுகிறது; விஜய் மக்கள் இயக்க ஐ.டி. விங்!

சனிக்கிழமை கூடுகிறது; விஜய் மக்கள் இயக்க ஐ.டி. விங்!
Published on: 
Updated on: 
1 min read

விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

நடிகர் விஜய் மக்கள் இயக்க கட்டமைப்பு வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் வகையில் வியூகங்கள் வகுத்து மக்கள் இயக்க நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் சனிக்கிழமை அன்று விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில் நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்க 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகளிர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, விவசாய அணி உள்ளிட 10 அணிகள் மற்றும் விஜய் மக்கள் மன்றத்தின் நகர, ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என நடிகர் விஜய், அந்த இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு உத்தரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத் தலைவரும் அவர்களின் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் தலா மூன்று பேரை அழைத்து வர உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com