மக்கள் செல்வனின் அடுத்தப் பட இயக்குநர் இவரா?

நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தப் படம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது
மக்கள் செல்வனின் அடுத்தப்
 பட இயக்குநர் இவரா?

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' கடந்த 14ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது.

இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி "ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்" பட இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் 'ஏஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதுதவிர்த்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'ட்ரெயின்' படமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில்,விரைவில் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவாக இருக்கிறது.

இந்த நிலையில், விஜய் சேதுபதி தனது அடுத்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப உறவுகள் சார்ந்த கதைகளை எடுத்துவருபவர் இயக்குநர் பாண்டிராஜ்.அவரது இயக்கத்தில் கடைசியாக,சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியானது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பாண்டிராஜின் அடுத்தப் படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில்,தற்போது விஜய் சேதுபதியுடன் இணைவதாக சொல்லப்படுகிறது.இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளாராம்.மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகும் என கூறப்படுகிறது

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com