

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் விஜய் சேதுபதி கடந்த வாரம் தலைமைப்பண்பு குறித்து பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று அவற்றுக்கு விளக்கம் அழித்துள்ளார்.
இன்றைய பிக்பாஸ் புரோமோவில், "இந்த மேடையில் நாங்கள் பேசுகிற கருத்துகள் எல்லாமே எங்களுக்கும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்குமானது மட்டுமே. வெளியில் யாரையும் எந்த அமைப்பையும் குறிப்பிடுபவை அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம்.
இதை நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைத்தேன். போன வாரமே சொல்லியிருக்க வேண்டும். சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது." எனப் பேசினார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியின் கருத்துகளுக்கு தவெகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. கடந்த செவ்வாய் (செப். 15) விஜய் டிவி நிர்வாகம் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தது.
“Bigg Boss தமிழ் சீசன் 10 ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள், கருத்துகள் அனைத்தும் நிகழ்ச்சியை மையப்படுத்திய சூழலுக்கு உட்பட்டவையே. அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்தவொரு நபர், அமைப்பு அல்லது கொள்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது” என விஜய் டிவி தெரிவித்தது.
பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரைக் கண்டிக்கும் விதமாகப் பேசிய விஜய் சேதுபதி, “லீடர்ஷிப் (தலைமைத்துவம்) என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளிவிட்டு, பிரச்னை வரும்போது எதிர்க்கட்சியின் மீது பழியைப் போட்டுவிட்டு தெறித்து ஓடுவது தலைமைப் பண்பல்ல!” எனக் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்