விஜய் சேதுபதியின் தெருக்கூத்து காலண்டர்..!

இயக்குநர் சீனு ராமசாமி புதிய காலண்டரை வெளியிட்டார்..!
விஜய் சேதுபதியின் தெருக்கூத்து காலண்டர்..!
Published on
Updated on
1 min read

நடிகர் விஜய் சேதுபதியின் தெருக்கூத்து கலைஞன் காலண்டர் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிறு-சிறு கதாபாத்திரங்களில் தோன்றி, பின்னர் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகனாக மக்கள் மனதில் பதிந்திருக்கும் விஜய் சேதுபதி, நாடகங்களை பெரிதாக பின்பற்றும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். சில படங்களில் நாடக கலைஞராகவும் கதாபாத்திரங்களில் தோன்றி அசத்தியுள்ளார். இந்நிலையில், விஜய் சேதுபதி தெருக்கூத்து கலைஞன் என்ற பெயரில் 2022-ம் ஆண்டிற்கான காலண்டரை, இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். இந்த தெருக்கூத்து கலைஞன் காலண்டர், சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com