விமானியுடன் விஜய் - த்ரிஷா...ஸ்பைஸ்ஜெட் வெளியிட்ட புகைப்படம் வைரல்!

விமானியுடன் விஜய் - த்ரிஷா...ஸ்பைஸ்ஜெட் வெளியிட்ட புகைப்படம் வைரல்!
Published on: 
Updated on: 
1 min read

லியோ படத்தில் நடித்து வரும் விஜய் மற்றும் த்ரிஷாவின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, மிஸ்கின் உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், விஜய்யும், த்ரிஷாவும் விமானத்தில் விமானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த புகைப்படத்தை ஸ்பைஸ்ஜெட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com