தவெக-வின் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் சங்கீதா இருவரும் தங்கள் விவாகரத்து தொடர்பான வழக்கில் ஜூன் 15 அன்று ஆஜராகுமாறு செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருப்பதாகக் கூறி சங்கீதா குற்றம் சாட்டி பிப்ரவரியில் தாக்கல் செய்த விவாகரத்து மனு ஏப்ரல் 20 அன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது, நீதிபதி இந்த வழக்கை விசாரித்து, ஜூன் மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். பிப்ரவரி 2026-ல் சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவின்படி, விஜய் ஒரு நடிகையுடன் 'திருமணத்திற்கு மீறிய உறவில்' இருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், இந்த உண்மையை 2021-ல் தான் கண்டுபிடித்ததாகவும் சங்கீதா அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த உறவை முறித்துக்கொள்வதாக விஜய் உறுதியளித்த போதிலும் , அவர் எந்தவித வருத்தமும் இல்லாமல் அதைத் தொடர்ந்ததாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், சங்கீதாவை தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என்று அனைத்திலும் விஜய் ஒதுக்கிவைக்கப்பட்டபோதிலும், அந்த நடிகையுடன், வெளிநாடு பயணங்களுக்கு செல்வது போன்றவற்றை செய்துவருகிறார். இதுமட்டுமின்றி, அந்த நடிகையும் அவர்களது புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். இதனை அவர் மறுக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. இந்தப் பதிவுகள் தனக்கும், தனது இரு பிள்ளைகளான ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷாவுக்கும் தொடர்ச்சியான அவமானத்தை ஏற்படுத்தியதாக சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தனக்கு இதற்கு முன்பு கிடைத்த வசதிகளையும் விஜய் தரமறுப்பதாகவும் சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஒரே வீட்டில் தனித்தனியாக வாழும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தற்போது ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த விவகாரத்து வழக்கு ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து ஜூன் 15ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றம் கூறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.