
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளிவர உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 200-க்கும் மேலான தியேட்டர்களை புக் செய்துள்ளனர்.
இதற்கிடையில் பல வருடங்களுக்கு முன்பே கீர்த்தி சுரேஷின் அம்மாவான மேனகா சுரேஷுடன் இணைந்து ரஜினிகாந்த் நெற்றிக்கண் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தற்போது அவரது மகளான கீர்த்தி சுரேஷ் உடன் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இருவரின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கூட ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடித்த அண்ணன் தங்கச்சி பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.