என்னது ஒரு போஸ்ட்-க்கு இவ்ளோ கோடியா? விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் வருமானம் 12 கோடி!

விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பர பதிவினை பதிவேற்ற 12 கோடி வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் வருமானம் 12 கோடி
விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் வருமானம் 12 கோடிவிராட் கோலியின் இன்ஸ்டாகிராம் வருமானம் 12 கோடி
Published on
Updated on
1 min read

விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பர பதிவினை பதிவேற்ற 12 கோடி வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ரொனால்டோ மாற்று மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக விராட் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி, இந்திய அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுடனான தனது பிரம்மாண்டமான ஒப்பந்தங்கள் மற்றும் பூமா, ஆடி, எம்ஆர்எஃப் போன்ற உலகளாவிய பிராண்டுகளுடனான அவரது சிறந்த விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பெரும் பணம் சம்பாதித்துவருகிறார். ஆனால், இன்ஸ்டாகிராமில் அவருக்கு இருக்கும் 276 மில்லியன் பின்தொடர்பாளர்களின் காரணமாக, அவரது வருமானத்தின் ஒரு கணிசமான பகுதி சமூக ஊடகப் பதிவுகள் மூலமாகவும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். தற்போது, கால்பந்து ஜாம்பவான்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் விராட் கால்பதித்துள்ளார். 673M ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள ரொனால்டோ 32 கோடி வாங்குவதாகவும், 512M ஃபாலோவர்ஸ் கொண்டுள்ள மெஸ்ஸி 25 கோடி வாங்குவதாகவும் கூறப்படுகிறது. தற்போது 12 கோடி பெறுவதன் மூலம் 3வது இடத்தில் விராட் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா ₹70 லட்சமும், தோனி 1.5 கோடியும், ரோஹித் ஷர்மா 76 லட்சமும் வாங்குவதகக பரவலாக கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவில் 94.5M ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள பிரியங்கா சோப்ரா ரூ. 2 கோடி பெறுவதாகவும், 80.3M ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ள தீபிகா படுகோன் 1 முதல் 2 கோடியும், 79.9M ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ள கத்ரீனா கைஃப் 1 கோடியும் பெறுவதாகவும், 87M ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ள ஆலியா பட் 1.5 கோடியும் பெறுவதாக 2023ம் ஆண்டு 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வெளியிட்டது. இவர்களை போன்ற பிரபலங்கள் தங்களது வருமானங்களை தாண்டி இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பர பதிவிற்கு இவ்வளவு வாங்குகிறார்களா? என்று அவர்களது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com