ரன்வீரைத் தொடர்ந்து ட்ரெண்டில் இணைந்த விஷ்ணு விஷால்; இணையத்தில் வைரலாகும் போட்டோக்கள்:

சமீபத்தில் ரன்வீர் சிங் வித்தியாசமான போட்டோஷூட் செய்து வைரலானதை அடுத்து, தற்போது விஷ்ணு விஷாலும் ட்ரெண்டில் இணைந்துள்ளார்.
ரன்வீரைத் தொடர்ந்து ட்ரெண்டில் இணைந்த விஷ்ணு விஷால்; இணையத்தில் வைரலாகும் போட்டோக்கள்:

இந்தியாவின் வித்தியாசமான விசித்திரமான் அவிஷயங்கள் செய்வதில் என்றும் முதன்மையாக இருப்பவர் பாலிவுட் நடிகர் மற்றும் தீபிகா படுகோனின் கணவர் ரன்வீர் சிங். எப்போதும் சர்ச்சைகளிலேயே இருக்கும் ரன்வீர் சிங், தற்போது இணையத்தையே அதிர வைக்கும் வகையில், ஒரு போட்டோஷூட் செய்து, அனைவரையும் வாய் பிளக்க வைத்து விட்டார்.

தி பேப்பர் என்ற இதழின் கவர் போட்டோஷூட்டிற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து, இணையத்தில் படு வைரலானார். அவரது தைரியத்தைப் பாராட்டி, பலர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு சிலர் அவரது செயலை எதிர்த்து விமர்சித்து வருகின்றனர்.

எதற்கு ரன்வீருக்கு இந்த தேவையற்ற வேலை என்றெல்லாம் ஒரு சிலர் கமெண்ட் செய்தும் வரும் நிலையில், தென்னிந்திய ரன்வீர் கப்பூராக மாறி இருக்கிறார் விஷ்ணு விஷால். "Joining the trend" என்ற தலைப்பில், தனது கட்டிலில் ரன்வீர் போலவே நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோக்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இவற்றைத் தனது காதல் மனைவி ஜுவாலா கட்டா எடுத்த போட்டோக்கள் என கேப்ஷனில் பதிவிட்டிருக்கிறார்.

குறிப்பிட்ட சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் விஷ்ணு விஷால், சமீபத்தில் நடித்து விமர்சண ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற படம் தான் எஃப் ஐ ஆர். தைரியமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஷால், இந்த போட்டோஷூட் வெளியிட்டதை அடுத்து, கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com