ஒழுங்கா மாநாடு படத்தை தடைபண்ணுங்க, இல்லன்னா சிம்பு வீட்டின் முன் போராட்டம் பண்ணுவோம்..! அரசுக்கு பாஜக எச்சரிக்கை!

மாநாடு திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், இல்லாவிட்டால் சிம்பு வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக பிரமுகர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒழுங்கா மாநாடு படத்தை  தடைபண்ணுங்க, இல்லன்னா சிம்பு வீட்டின் முன் போராட்டம் பண்ணுவோம்..! அரசுக்கு பாஜக எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த வியாழக் கிழமை தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.  

இந்தநிலையில் பாஜகவின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மாநாடு படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மாநாடு திரைப்படத்தில் படத்தில் போலீசாரை தீவிரவாதிகள் போல சித்தரித்துள்ளனர்.  மேலும் வன்முறையை தூண்டும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன. இந்த சர்சைக்குரிய காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றார். 

இந்து- முஸ்லிம் ஒற்றுமையை சீர்குழைக்கும் நோக்கில் இந்த படம் அமைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் மாநாடு திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும் தடை செய்யாவிட்டால் மாநாடு படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் வீடு முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com