

யஷின் பிரம்மாண்டமான படமான 'டாக்ஸிக்', ஆகஸ்ட் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகி, சர்ச்சைகளையும், ரசிகர்களிடையே விவாதத்தையும் ஏற்படுத்தியது. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய 'ஹைப்' ஒன்றினை உருவாக்கியது. ஆனால் அது நிவர்த்தி செய்ததா? என்று கேட்டால் அது கேள்வி குறிதான். இதுஒருபுறம் இருக்க, யஷின் தாயார் புஷ்பா அருண்குமார், தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் பழைய கருத்தை மறைமுகமாகக் கிண்டல் செய்யும் விதமாக, "கே.ஜி.எஃப்-க்கு முன்பு யஷ் யார்?" என்று கூறியுள்ளார்.
"KGF படத்திற்கு முன்பு, யஷ் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தார். எனவே, நீங்கள் கூறுவது போல் அவர் ஒரு சாதாரண மனிதர், யாருமற்றவர் என்றால், பிறகு ஏன் நீங்கள் (சம்பந்தப்பட்ட நபர்) மிரட்டப்படுகிறீர்கள்? அவர் ஒரு பயங்கரவாதி அல்ல. KGF படத்திற்கு முன்பு அவர் யார்? என்று கேட்கத் தேவையில்லை; அதற்கு முன்பே அவர் நல்ல படங்களைக் கொடுத்திருந்தார். மேலும், வேறு சிலரைப் போல அவர் செல்வந்தக் குடும்பத்தில் பிறக்கவில்லை. அவர் ஒரு பேருந்து ஓட்டுநரின் மகன், தன் சொந்த முயற்சியால் உச்சத்திற்கு உயர்ந்தவர். ஒரு தாயாக, நான் அவரை நினைத்துப் பெருமைப்படுகிறேன்," என்று யஷின் தாய் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அல்லு அரவிந்த் சொன்னது இந்த சர்ச்சை 2023-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது, நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும் மூத்த தெலுங்கு தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், KGF படத்தின் வெற்றி குறித்துப் பேசியதோடு, "KGF திரைப்பட தொடருக்கு முன்பு யஷ் யார்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அப்படத்தின் பிரம்மாண்டமான அளவும் தயாரிப்பு மதிப்பும்தான் அதன் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் 'ஆப் கி அதாலத்' நிகழ்ச்சியில் ரஜத் ஷர்மாவிடம் பேசியபோது, யஷ் அந்தக் கருத்து குறித்துப் பேசினார். அந்த உரையாடலின் போது, "KGF படத்திற்கு முன்பு யஷ் யார்?" என்ற கேள்வியை தொகுப்பாளர் குறிப்பிட்டார். ஒரு படத்தின் வெற்றியை ஒரே ஒரு நபருக்கு மட்டும் காரணம் காட்ட முடியாது என்று யஷ் குறிப்பிட்டுள்ளார். "ஒரு திரைப்படம் தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்று நான் நம்புகிறேன். ஒரு திரைப்படத்தில் பலர் பணியாற்றுகிறார்கள், ஆனால் அதற்கான பெருமை பெரும்பாலும் நடிகருக்கே கிடைக்கிறது. துணை நடிகர், எழுத்தாளர் அல்லது குழுவின் வேறு எந்த உறுப்பினராக இருந்தாலும், அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், ஒரு நடிகருக்காக உருவாக்கப்பட்டதை அவரால் தாங்கிச் செல்ல முடியாவிட்டால், அந்தப் படம் வெற்றி பெறாமல் போகலாம்," என்று அவர் தெரிவித்துள்ளார். நல்ல கன்டென்ட் மற்றும் நல்ல நடிப்பைப் பாராட்டும் அளவுக்குப் பார்வையாளர்கள் புத்திசாலிகள் என்று கூறி, யஷ் அவர்களுக்கும் நன்றியும் தெரிவித்திருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்