விக்கி - நயன் திருமண பந்தியில் இடம்பெற்ற உணவகங்களின் Menu பட்டியல்...! இதோ...

விக்கி - நயன் திருமண பந்தியில் இடம் பிடித்த பலாக்காய் பிரியாணி...!
விக்கி - நயன் திருமண பந்தியில் இடம்பெற்ற உணவகங்களின் Menu பட்டியல்...! இதோ...
Published on
Updated on
1 min read

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமணம் சென்னையை அடுத்த வட நெம்மேலியில் உள்ள தனியார் கடற்கரை விடுதியில் திரைப்பிரபலங்கள் புடை சூழ மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமண நிகழ்வில் பங்கு பெற்ற பிரபலங்கள் அனைவருக்கும் அறுசுவை உணவுகள் விருந்தளிக்கபட்டுள்ளன.

இந்நிலையில் திருமண  விருந்தில்  அளிக்கப்பட்டுள்ள உணவுகள் குறித்த Menu விவரம் தற்போது வெளியாகியுள்ளது.  அந்த Menu வில் பன்னீர் பட்டாணிக்கறி, பருப்புக் கறி ,அவியல், மோர் குழம்பு, சிக்கன் செட்டிநாடு கறி உருளை மசாலா, வாழைக்காய் வறுவல், சேனைக்கிழங்கு வறுவல், சேப்பங்கிழங்கு, புளி குழம்பு, காளான் மிளகு வறுவல், கேரட் பீன்ஸ் பொரியல், பொன்னி அரிசி ( பலாக்காய் பிரியாணி) சாம்பார் சாதம், தயிர் சாதம், பூண்டு மிளகு ரசம், தயிர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதில் பெரும்பாலும் கேரளா நாட்டு உணவகங்கள் தான் அதிகம் இடம்பெற்றுள்ளதாக தகவல் கூறுகின்றது. தற்போது இந்த Menu கார்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com