வெறித்தனமான Fan-னா இருப்பாரோ?.. துப்பாக்கியுடன் "RRR" படம் பார்க்க வந்த ரசிகர்!!.. அப்புறம் தான் பெரிய ட்விஸ்ட் இருக்கு?

வெறித்தனமான Fan-னா இருப்பாரோ?.. துப்பாக்கியுடன் "RRR" படம் பார்க்க வந்த ரசிகர்!!.. அப்புறம் தான் பெரிய ட்விஸ்ட் இருக்கு?
Published on
Updated on
1 min read

இந்திய சினிமா ரசிகர்கள் கிட்டத்தட்ட 3 வருடங்கள் காத்திருந்த ஆர்.ஆர்.ஆர்.. அதாவது  (இரத்தம் ரணம் ரௌத்திரம்) அநாயச அசத்தலுடன் ரிலீஸாகிவிட்டது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்து வெளியான படம் "RRR". இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் அளவில் காத்து கொண்டிருந்தனர். இப்படம் வெளியான ஒரே நாளில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஒரு திரையரங்கில் RRR திரைப்படத்தை பாக்க வந்த ஒரு ரசிகர் துபாக்கியுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தை ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலான நிலையில், இது போலீசார் கவனத்திற்கு செல்ல, துப்பாக்கி கொண்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் பெயர் பாலாஜி எனவும், பிதாபுரம் நகரில் உள்ள கொட்டகுமம் சென்டரில் வசிப்பவர் எனவும் தெரியவந்தது. 

இந்நிலையில், துப்பாக்கி கைப்பற்றப்பட்டதும், அது கண்காட்சிகளில் பலூன்களை சுட பயன்படுத்தப்படும் "ஏர் பிஸ்டல்" என போலீசார் கண்டுபிடித்தனர். ஆன்லைன் மூலம் துப்பாக்கியை வாங்கியதாக பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளார். திரையரங்கில் சினிமா பார்வையாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதற்காக அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com