
தமிழ் திரையுலகில் நடிகைகளில் ஒருவரும், பஞ்சாப்பில் மாடல் அழகியும் ஆன யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் பிரபலமானார்.
இவர் சமீபத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்து, அதன் பின்னர் அவர் கடந்த 6 மாதங்களாக பெற்ற சிகிச்சையால் படிப்படியாக குணமாகி தற்போது அவர் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.
அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது ’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ’சாமி சாமி’ என்ற பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சாமி சாமி’ என்ற பாடலுக்கு ராஷ்மிகா ஆடிய நடனம் நல்ல ஹிட் கொடுத்தது. அந்த பாடலுக்கு பாவாடை தாவணி காஸ்ட்யூமில் யாஷிகா ஆனந்த் செம ஆட்டம் போட்டுள்ளார்.