

விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்பவர் செஃப் தாமு. புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் நடைபெற்று வருகிறது.
இதன் செமீ ஃபைனல் சுற்றில் தாமு கலந்துகொள்ள வில்லை. இதைத் தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. இந்த நிலையில் வதந்திக்களுக்கு தானே முன்வந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தாமு.
சமையல் கலை உலகில் கின்னஸ் உட்பட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளவர் தாமு. உலகளாவிய விருதுகளை வென்றுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தொடர்ந்து பங்கெடுத்து வந்த இவருக்கு புதிய அடையாளத்தை வழங்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
இவர் ஒரு எபிசோடில் கலந்து கொள்ளாதது விபரீதமான வதந்திகள் பரவ காரணமாக அமைந்துவிட்டது. இது தன்னை பிடிக்காதவர்களால் பரப்பட்டதாக தாமு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த விளக்கத்தில், கடவுள் புண்ணியத்தில் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். பிடிக்காதவர்கள் எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
அதனால் அதையெல்லாம் நம்பாதீர்கள். காலில் ஊசி செலுத்தியதால் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் செமி ஃபைனலில் பங்கேற்க முடியவில்லை, ஃபைனலில் பங்கேற்றேன்.
உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன். அதனால் தேவையில்லாத வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சீக்கிரமே நான் திரும்பி வருவேன். நான் உயிரோடுதான் இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
செஃப் தாமு மீதான வதந்திகள் அவரது ரசிகர்களை கோபம்கொள்ள செய்துள்ளன. இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்