132 மாணவர்கள் வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றியுள்ளனர் : காரணம் ஓரு ஆசிரியர்...

132 மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றியுள்ளனர். போனகல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஜே. ஸ்ரீனிவாஸ்
132 மாணவர்கள் வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றியுள்ளனர் : காரணம் ஓரு ஆசிரியர்...

தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து 132 மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றியுள்ளனர். போனகல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஜே. ஸ்ரீனிவாஸ் (53) ஜூலை 1-ஆம் தேதி அக்கபெல்லிகுடா கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குள், பள்ளியின் 250-க்கும் மேற்பட்ட மாணவர்களில் 132 பேரின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீனிவாஸ் புதிய பள்ளிக்கு மாற்ற முடிவு செய்தனர்.

ஸ்ரீநிவாஸ், பெற்றோரின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததோடு, மாநிலத்தில் கல்வியை உயர்த்த உதவும் வகையில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com