தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக காங்கிரஸ்....!

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக காங்கிரஸ்....!
Published on: 
Updated on: 
1 min read

நாகாலாந்து, மேகாலயாவில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவதால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. 

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.  கடந்த சில தினங்களுக்கு முன் திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து மேகாலயா மற்றும் நாகாலாந்தில் வரும் 27ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  மேகாலயாவை பொறுத்தவரை 60 இடங்களுக்கு பாஜக, காங்கிரஸ் உட்பட 11 கட்சிகளைச் சோ்ந்த 375 பேர் போட்டியிட்டுள்ளனர்.

அதேபோல் நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு 183 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இன்று மாலை பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com